×

டிசிபி, டிசிஆர்பி, எஸ்ஜேஎச்ஆர் பிரிவு விரைவில் தொடக்கம் ஆவணங்கள் பிரிக்கும் பணிகள் தீவிரம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான

வேலூர், மார்ச் 4: திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான டிசிபி, டிசிஆர்பி, எஸ்ஜேஎச்ஆர் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆவணங்களை பிரித்து வைக்கும் பணிகள் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 5 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய மாவட்டங்களுக்கு தேவையான கலெக்டர், அலுவலகம், எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்கள் தொடங்கப்பட்டு, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள டிசிபி, டிசிஆர்பி, எஸ்ஜேஎச்ஆர் பிரிவு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான மேற்கண்ட போலீஸ் பிரிவு ஆவணங்கள் பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் டிசிஆர்பி பிரிவு பணிகள் குறித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்ட போலீசாருக்கு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் 2 மாவட்டங்களுக்கும் டிசிஆர்பி, டிசிபி, எஸ்ஜேஎச்ஆர் ஆகிய பிரிவுகள் தனியாக தொடங்கப்பட உள்ளது. என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : TCRP ,Ranipettai District ,Tiruppattur ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்...