×

நீதிமன்றங்களில் கிடைக்காத நீதி வீதிமன்றங்களில் தான் கிடைக்கும்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 4: நீதிமன்றங்களில் கிடைக்காத நீதி வீதிமன்றங்களில் தான் கிடைக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல்சமது கூறினார். காட்டுமன்னார்கோவிலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சிஏஏ உள்ளிட்ட மத்திய அரசின் குடிமக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மஹபூப்பாஷா தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம், விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், திக மகளிரணி அமைப்பாளர் மதிவதனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல்சமது பேசியதாவது: சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் உள்ளிட்ட குடிமக்கள் விரோத சட்டங்கள் மத்திய அரசால் திரும்ப பெறப்படும் வரை நாடு முழுவதும் இதுபோன்ற கண்டன பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெறும்.மேலும் பாபர்மசூதி இடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதி மன்றங்களிடமிருந்து உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே இந்த சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கங்களை நடத்தி குடியரசு தலைவருக்கு அனுப்பினாலும் பயனில்லை. ஆகவே நீதி மன்றங்களில் கிடைக்காத நீதி இதுபோன்ற வீதி மன்றங்களில்தான் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார். நகர தலைவர் அன்வர் உசேன் நன்றி கூறினார். இந்த பொதுக்கூட்டத்தையொட்டி டிஎஸ்பி ஜவஹர்லால், காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : courts ,
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...