×

குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் மாணவர் அனுமதி

நாகர்கோவில், மார்ச் 4 :  குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்ட்டில், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த மாணவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சீனாவை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அங்கு இதுவரை 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மற்ற நாடுகளிலும் கொேரானா பாதிப்பு பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 6 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கேரளாவில் கொேரானா பாதிப்பு உள்ளதால், குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ், சிறப்பு சிகிச்சை வார்டு, முன் கவனிப்பு சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சீனாவில் பயின்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 8 பேருக்கு நடந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் குமரியை சேர்ந்த 22 வயது வாலிபர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இளங்கலை  படிப்பு படித்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்த இவருக்கு சளி பிரச்னை இருந்து உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று விசாரித்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் நேற்று முன் தினம் இரவு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாணவரை அழைத்து வந்து  பரிசோதனை செய்தனர். பின்னர் அவரை கொரோனா சிறப்பு சிகிச்சை முன் கவனிப்பு வார்டில் அனுமதித்துள்ளனர். அவரது சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை அவர், சிறப்பு சிகிச்சை வார்டில் இருப்பார். அவருக்கு டாக்டர்கள் கவச உடை அணிந்து தொடர்ந்து பரிசோதனை நடத்தி வருகிறார்கள். ரத்தம் மற்றும் சளி மாதிரி முடிவில், எந்த வித பாதிப்பும் இல்லை என்பது உறுதியானால், அவர் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Tags : Corona Special Medical Ward ,Kumari State Medical College ,
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...