×

கல்வி மாவட்ட அளவில் ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு சான்றிதழ்

சாத்தான்குளம், மார்ச் 4: கல்வி மாவட்ட அளவில் ஆளுநர் விருது பெற்ற  சாரண, சாரணியர்களுக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி பால்துரை சான்றிதழ்  வழங்கினார். சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் டிஎன்டிடிஏ தூய மிகாவேல்  மேல்நிலைப்பள்ளியில் சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் சிந்தனை நாள் பேரணி  3 நாட்கள் நடந்தது. சாரண, சாரணிய இயக்கத்தை தோற்றுவித்த பேடன்பவுல் பிறந்த  தினத்தை முன்னிட்டு பாரத ஒற்றுமை, சுற்றுப்புற தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு,  சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிறைவு நாளில்  திருச்செந்தூர் கல்வி மாவட்ட அளவில்  ஆளுநர் விருது பெற்ற  சாரண,  சாரணியர்களுக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி பால்துரை, விருது மற்றும் சான்றிதழ்  வழங்கி பேசினார்.

இதில் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 150  சாரண, சாரணியர்கள் கலந்து  கொண்டனர். தொடர்ந்து சாரண, சாரணியர்களுக்கு  மாவட்ட அளவில் திறன்சாகர் போட்டிகள் நடந்தது. மாவட்ட பொருளாளர்  சுகுமார் ஜெபத்துரை, மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையர் பொன்ராஜ்கோயில்தாஸ்,  மாவட்ட பயிற்சி ஆணையர் பாலா, உதவி செயலாளர் காரட் காபிரியேல் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். விழா  ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் செல்வராஜ்  செய்திருந்தார். 

Tags : Governor ,District of Education ,
× RELATED விஜய் பட போலி தணிக்கை சான்றிதழ் வெளியீடு