×

சாலைபுதூர் மாவு மில்லில் இயந்திரம் திருடியவர் கைது

சாத்தான்குளம், மார்ச் 4: சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூரில், பிரின்ஸ்துரை மகன் டேபியோ ஜேம்ஸ்துரை(32) என்பவருக்கு சொந்தமான மாவு மில் உள்ளது. இதனை திருச்சி சமயநல்லூரை சேர்ந்த பொன்னுபாண்டியன் மகன் காமராஜ்(36) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தார். இதனிடையே ஒப்பந்தம் முடிந்த நிலையில் மாவு மில்லில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இயந்திரத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாவு மில் இயந்திரத்தை காமராஜ் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், காமராஜை கைது செய்து இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : roadbudur flour mill ,
× RELATED இன்றும், நாளையும் நடக்கிறது தூத்துக்குடியில் பேரின்ப பெருவிழா