×

4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி, மார்ச் 4: தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தாசில்தார்களை நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி விடுப்பில் இருந்த தாசில்தார் இளங்கோ, தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை பிரிவு-1 நில எடுப்பு தனிதாசில்தாராகவும், திருச்செந்தூர் இஸ்ரோ சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் பிரிவு-1 நிலஎடுப்பு தனிதாசில்தார் எம்.கண்ணன், கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ளநீர் கால்வாய் மூலம் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகள் இணைப்பு திட்ட நில எடுப்பு தனிதாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல திருச்செந்தூர் தலைமையிடத்து துணை தாசில்தார் எஸ்.கே.முத்து, திருச்செந்தூர் இஸ்ரோ சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் பிரிவு-1 நிலஎடுப்பு தனிதாசில்தாராகவும், கிழக்கு கடற்கரை சாலை பிரிவு-1 நில எடுப்பு தனிதாசில்தார் சேதுராமன், முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags : Tasildars Workplace Change ,
× RELATED ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது