×

சங்கரன்கோவிலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

சங்கரன்கோவில், மார்ச் 4: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வர்த்தக அணியினர் மாநில துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து  பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் கழுகுமலை சுப்பிரமணியன், வாசு ஒன்றியச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் மாடசாமி, சங்கை நகர பொருளாளர் யோசப், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் அண்ணாவியப்பன், வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள்  முத்துராமலிங்கம், வெற்றி விஜயன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ்,  மாணவர் அணி குருவிகுளம் தெற்கு ஒன்றிய அமைப்பாளர் செந்தில்நாதன், கலை பகுத்தறிவுப் பேரவை மேலநீலிதநல்லூர் ஒன்றிய அமைப்பாளர் சுகுமாரன், இலக்கிய அணி குருவிகுளம் தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கண்ணன், களப்பாங்குளம் ஊராட்சி செயலாளர் காளை பாண்டி, அழகாபுரி ஊராட்சி செயலாளர் மாரியப்பன், பழங்கோட்டை ஊராட்சி செயலாளர் கணேசன், விவசாய அணி குருவிகுளம் ஒன்றிய அமைப்பாளர் மாரிராஜ், களப்பாகுளம் ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், வடக்குஅச்சம்பட்டி  செயலாளர்  சவுந்தர், மாணவர் அணி ஆலங்குளம் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் பூலோகராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் பாலசுப்ரமணியன், ஊத்துமலை முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பரமசிவம், வார்டு செயலாளர்கள் துரை பாண்டியன், பால்பாண்டியன், கருப்பனூத்து செயலாளர் கதிரவன், ஒன்றிய பிரதிநிதி கருத்தபாண்டி, வன்னிக்கோனேந்தல் செயலாளர் வெளியப்பன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், தெற்கு அச்சம்பட்டி ராஜதுரை, மேல இலந்தைகுளம் பிரதீப், மடத்துப்பட்டி வீமராஜ்,வன்னிக்கோனேந்தல் பசுபதி பாண்டியன், வெங்கடாசலபுரம் மணி, வீராணம் முன்னாள் போலீஸ் அதிகாரி பன்னீர்செல்வம், விசுவநாதபேரி பேச்சிமுத்து, தேன்பொத்தை கருப்பசாமி, திருமலாபுரம் முருகன், விஸ்வநாதபுரம் தென்பகுதி செல்லப்பா,  பெருமாள், குத்துக்கல்வலசை ஆனந்த், இலஞ்சி பலவேசம், விஸ்வநாதபுரம் வேம்புராஜ், பாரதி நகர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் டாக்டர் அய்யாத்துரை பாண்டியன் செய்திருந்தார்.

Tags : Stalin ,Birthday ,Sankarankoil ,
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...