புளியங்குடி வீராசாமி செட்டியார் இல்ல திருமண வரவேற்பு விழா

புளியங்குடி, மார்ச் 4: புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் இல்லத் திருமண  வரவேற்பு விழா ராஜபாளையத்தில் விமரிசையாக நடந்தது.

புளியங்குடி எஸ்.வீராசாமி அறக்கட்டளை துணைத்தலைவர் பழனி- பார்வதி தம்பதியினரின் மூத்த மகன் விக்ரம் வேலு பாண்டியன். இவருக்கும், ஹைதரபாத்தை சேர்ந்த அகஸ்தியா சந்திரகுமார்- அகஸ்தியா லக்ஷ்மி தம்பதியினரின் மூத்த மகள் அகஸ்தியா சினேகாவிற்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ராஜபாளையத்தில் விமரிசையாக நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருமண வரவேற்பு விழாவும் நடந்தது.

 இதில் வீராச்சாமி செட்டியார் கல்வி அறக்கட்டளை தலைவரும், மணமகனின் பெரியப்பாவுமான டாக்டர் முருகையா- தங்கம் முருகையா, சித்தப்பா ராஜூ- ராமலட்சுமி, மனோகரன் எம்.எல்.ஏ. தங்கபழம் கல்வி நிறுவனங்களின் அதிபர் முருகேசன், புளியங்குடி காஜாமுகைதீன், தெலுங்கு செட்டியார் சமூகத் தலைவர் ராஜசேகர், சித்துராஜ், வக்கீல் பாலமுருகன், டாக்டர் சுப்ரமணியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories:

>