×

கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் மின்கம்பம் அமைக்க ஏற்பாடு

நெல்லை, மார்ச் 4:  ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளான நெல்லை- பாளை மாநகரங்களை இணைக்கும் தாமிரபரணி ஆறு சுலோச்சனா முதலியார் பாலம் அருகே புதிய அமைக்க ரூ.16.5 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 2018ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கின. தாமிரபரணி இரு கரைகளையும் பாலம்  தொடும் வகையில் 10 தூண்கள், 11 சிலாப்புகளுடன் பாலம் அமைந்துள்ளது. இந்தபுதிய பாலத்தின் நீளம் 220 மீட்டர் ஆகும். அகலம் 14.8  மீட்டராக உள்ளது.  

மேலும் பலாப்பழ ஓடை பாலம்  அருகே மற்றொறு சிறிய பாலமும் அமைக்கப்பட்டது. கொக்கிரகுளம் அறிவியல் மையம் முன்பகுதியில்  இருந்து எதிரே உள்ள பஸ் நிறுத்தம் வரை 14 மீட்டர் அளவிற்கு சாலை  அகலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் சில நாட்கள் மட்டும் பரீட்சாத்தமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. தற்போது பாலம் பணி முடிந்த நிலையில் அதன் நுழைவு பகுதி மூடப்பட்டுள்ளது. மின் கம்பங்களை புதிய பாலத்தில் அமைப்பதற்கான பணிகளை மின்வாரியத்தினர் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக மின்கம்பங்கள் நேற்று கொண்டுவந்து வைக்கப்பட்டன. மின்கம்பங்கள் இணைத்து மின்னொளி கொடுத்ததும் பாலம் பணி 100 சதவீதத்தை எட்டும். அதன் பின்னர்பாலம் போக்குவரத்திற்காக திறந்துவைக்கப்படும்.

Tags : Kokkirakulam New River Bridge ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது