×

பல்லாவரம் அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

பல்லாவரம், மார்ச் 3: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (43). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரகுமார், வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார்.
பம்மல் பகுதியில் சென்றபோது, அங்குள்ள கடைக்கு செல்வதற்காக பைக்கை, கடையின் முன்பு நிறுத்தினார். பொருட்கள் வாங்கி கொண்டு வெளியே வந்தபோது, பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து ராஜேந்திரகுமார், சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி பைக்கை, 2 பேர் சென்றனர். அவர்களை மடக்கி பிடித்துவிசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார், 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திருநீர்மலையை சேர்ந்த சதீஷ் (28), பம்மல் குணாநிதி (29) என்றும், ராஜேந்திரகுமார் பைக்கை திருடியதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறயைில் அடைத்தனர்.

Tags : vehicle theft ,Pallavaram ,
× RELATED சென்னை பல்லாவரம் அடுத்த...