×

சுடுகாட்டில் குளம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

பெரும்புதூர், மார்ச் 3: குன்றத்தூர் ஒன்றியம் காவனூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராம மக்களுக்கு அதே பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு, சுடுகாடு உள்ளது. தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த சுடுகாட்டில் குளம் அமைக்கும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று பணியை தடுத்து நிறுத்தினர். குன்றத்தூர் ஒன்றியம் காவனூர் ஊராட்சி காவனூர், துவாரகா மாயி நகர், சென்னை சிட்டி, டாக்டர் சிட்டி, சாய்பாபா நகர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 7 சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு, சுடுகாடு அமைந்துள்ளது.

மேலும், அந்த பகுதியில் உள்ள பழமையான  அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் இந்த சுடுகாட்டில் மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 90 ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவை காண, ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடி வழிபடுகின்றனர். தற்போது இந்த சுடுகாட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில் குளம் அமைக்கும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதை அறிந்ததும், கிராம மக்கள் அங்கு சென்று, குளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவனூர் கிராம சுடுகாட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில் குளம் அமைக்கும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதை அறிந்ததும், கிராம மக்கள் அங்கு சென்று, குளம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினோம்.ஏற்கனவே சுடுகாட்டை ஒட்டி ஒரு குளம் உள்ளது. 7 சமூகத்தை சேர்ந்த மக்கள் யாரேனும் இறந்தால் இந்த சுடுகாட்டில் ஈமச்சடங்கு நடத்தப்படுகிறது. பெற்று வருகிறது. ஈமச்சடங்கு நடத்த தற்போது இடம் போதுமானதாக உள்ளது. காவனூர் பகுதி வளர்ந்து வரும் பகுதியாகும், ஏராளமான குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் வருங்காலத்தில் சுடுகாட்டுக்கு இடபற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சுடுகாட்டில் குளம் அமைக்கக் கூடாது என்றனர்.

Tags : pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...