×

கடுகப்பட்டு ஊராட்சியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

செய்யூர், மார்ச் 3: கடுகப்பட்டு ஊராட்சி தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளில் தண்ணீருக்காக அலைந்து திரிகின்றனர். செய்யூர் வட்டம், லத்தூர் ஒன்றியம் கடுகப்பட்டு ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள ஊர் மற்றும் காலனி பகுதிகளில் 20 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் 5க்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு, குடிநீர் வினிகோயம் செய்யப்பட்டது.ஆனால், கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள், போதுமான குடிநீர் கிடைக்காததால் பைப்லைன் பகுதிகளில் 5 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி, அதில் இறங்கி குடிநீர் பிடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் ஊராட்சியில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 6 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. ஏரி பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து இந்த தொட்டிக்களில், குடிநீர் ஏற்றப்பட்டு, எங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த 6 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றும் மோட்டார்கள் 2 மட்டுமே உள்ளது. இதனால் நாள் முழுக்க மோட்டார்கள் இயக்கினாலும் மேல்நிலை தொட்டிகளுக்கு சரிவர குடிநீர் ஏற்ற முடியவில்லை. குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதனால் மக்கள், பைப் லைன் பகுதியில் 5 அடி வரை பள்ளம் தோண்டி குடிநீர் பிடிக்கும் அவலநிலை உள்ளது. ஆனாலும் போதிய குடிநீர் கிடைக்காததால் நாங்கள் குடிநீருக்காக, பல்வேறு பகுதிகளில் காலி குடங்களுடன் அலைந்து திரிகிறோம்.

ேமலும், தண்ணீருக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில், மழைக்காலங்களில் பெய்த மழைநீர் முழுமையாக நிரம்பிவிட்டது. இதில், குடிநீரும் மாசடைந்து வருவதோடு பள்ளங்களால், குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு தொட்டிக்கும் ஒவ்வொரு மின் மோட்டார்கள் இருந்தால் குடிநீர் பிரச்சனை இருந்திருக்காது. முன்பு ஊராட்சியில் பணியாற்றிய ஊராட்சி செயலர் செய்த  ஊழல்களே இதற்கு காரணம். ஊழல் செய்ததால், அவர் வேறு பகுதிக்கு மாறுதலாகி சென்றார். தற்போது, புதிதாக ஊராட்சி செயலர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் குடிநீர் பிரச்னை பற்றி புகார் கூறுனிால், ஊராட்சி நிதியில் தற்போது ₹521 மட்டுமே உள்ளது. அதை வைத்து ஊராட்சி பணிகளை மேற்கொள்ள முடியாது. நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறுகிறார். இப்பிரச்னை குறித்து வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி, வட்டாட்சியர், கலெக்டர் என பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் ஊராட்சி மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : peninsula ,
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...