×

பல்வேறு சிறப்பம்சங்களுடன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை தனித்துவமானதாக மாற்ற முடிவு

சென்னை, மார்ச் 3: பல்வேறு சிறப்பம்சங்களுடன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை தனித்துவமானதாக மாற்ற முடிவு செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இது அதிகரித்து காணப்படும். மேலும், முக்கிய நிலையமாக காணப்படும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்த நிலையம்தான் ஆசியாவின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.பூமிக்கடியில் மொத்தம் 3 அடுக்குகளை கொண்ட நிலையமாக சென்ட்ரல் மெட்ரோ நிலையம் திகழ்கிறது. நாள்தோறும் இந்த நிலையத்தை 10 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, சென்னை அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி, பூங்கா நகர் பறக்கும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் இந்த மெட்ரோ நிலையத்திற்கு அருகில்தான் அமைந்துள்ளன.எனவே, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை தனித்துவம் கொண்ட நிலையமாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இதற்கான அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் சென்னை மாநகரினை ஒன்றோடு ஒன்று இணைக்கும் மையமாகும். ஒவ்வொரு நாளும் புறநகர் போக்குவரத்து, அலுவலகப்பணி, வணிகம் சாந்த பணிகளுக்கு மெட்ரோ ரயிலை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை தனித்துவம் கொண்ட ஒரு இடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்னொளி அலங்காரத்துடன் 12 கண்ணாடி மின்தூக்கி மற்றும் 6 நுழைவாயில்களும், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் 2 திறந்த வகை கண்ணாடி நுழைவாயில்களையும் அமைக்கப்பட உள்ளது. இந்த மின்னொளி அலங்காரங்கள் ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், ஹவுரா பாலம், கேன்டன் கோபுரம், சியோல் கோபுரம் ஆகிய தனித்துவம் வாய்ந்த இடங்களின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இவ்வாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Central Metro station ,
× RELATED சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில்...