×

டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கும்மிடிப்பூண்டி, மார்ச் 3: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. விழாவிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் தமிழரசன், டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஞானபிரகாசம், துணை முதல்வர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் சுகாதா தாஸ், நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு அறிவியல் படைப்புகள் குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கண்காட்சியை காணவந்த பொதுமக்களிடம் விளக்கினர். தொடர்ந்து சிறப்பாக அறிவியல் படைப்புகளை எடுத்துரைத்த மாணவர்களுக்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.தொடர்ந்து புதிய அறிவியல் படைப்புகள், ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு டி.ஜெ.சிவானந்தம் கல்வி அறக்கட்டளை சார்பில் ஊக்கத் தொகையும், தேவையான உதவிகளும் வழங்கப்படும் என டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தெரிவித்தார்.

Tags : Science Exhibition ,TJS Matriculation School ,
× RELATED வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி