×

குடிநீர் தொழிற்கூடங்கள் மூடப்படுவதால் 2,000 தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிப்பு

திருச்சி, மார்ச் 3: திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். டிஆர்ஓ சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். குடிநீர் தொழிற்கூடங்கள் மூடப்படுதால் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் 17 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். விற்பனை முகவர்களாக சுமார் 2,000 பேர் இருக்கின்றனர். மேலும் எங்களிடம் டிரைவர்களாகவும், கூலி தொழிலாளர்களாகவும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலையே பிரதான வாழ்வாதாரமாக வைத்து பிழைத்து வருகிறோம். தற்சமயம் நீதிமன்ற உத்தரவால் குடிநீர் உற்பத்தி தொழிற்கூடங்கள் மூடப்படுவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள குடிநீர் தேவையை 75 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறோம்.  இந்த தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு, பாதிப்படைந்து கொண்டிருக்கும் எங்களின் வாழ்வாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டுத்தர கோரியும், பொதுமக்களின் குடிநீர் தேவையை இயல்பு நிலையை அடையவும் வழிவகை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் என அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Tags : closure ,drinking water plants ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...