×

கலெக்டரிடம் மனு லஞ்சம் தர மறுத்ததால்

திருச்சி, மார்ச்.3: திருச்சி திருவானைக்காவலை சேர்ந்தவர் பட்டதாரி ஆசிரியர் நாகராஜன். மாற்றுத்திறனாளியான இவர், திருவானைக்காவல் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார். இவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2008ம் ஆண்டு பணி மாறுதல் காரணமாக ரங்கம் அரங்கநாயகி ஆரம்ப பள்ளியிலிருந்து திருவானைக்காவல் உயர்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன். அப்போது எனக்கு திருவானைக்காவல் உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கக்கோரி கிளார்க் ரங்கராஜனிடம் கேட்டபோது, அவர் ரூ.3,000 லஞ்சம் கேட்டார். அதை கொடுக்க மறுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தேன். போலீசார் அறிவுரைப்படி கிளார்க் ரங்கராஜனிடம் ரூ.3,000 பணம் தந்தபோது அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பிறகு அன்றே எனக்கு ஓராண்டு சம்பளம் முழுவதும் வந்தது. இதை மனதில் வைத்துக்கொண்டு எனது பள்ளி நிர்வாகம் சட்டத்துக்கு புறம்பாக எனக்கு ஜூனியரான சித்ரா, தேவி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து வருகிறது. சட்டரீதியாக எனக்கு பதவி உயர்வு வழங்க மறுக்கிறது. நான் தாழ்த்தப்பட்டவன் என்பதாலும், லஞ்சம் தர மறுத்ததாலும் பள்ளி நிர்வாகம் பழிவாங்கும் வகையில் திட்டமிட்டு எனது பதவி உயர்வை வழங்க மறுக்கிறது. எனவே தாழ்த்தப்பட்ட, மூப்பு மாற்றுத்திறனாளி ஆசிரியரான எனக்கு மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...