×

வீரப்பூர் கோயில் மாசித்திருவிழாவில் ேவடபரி

மணப்பாறை, மார்ச் 3: வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
கி.பி.1020ம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும் பொன்னர்-சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் கடந்த திங்கட்கிழமை இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் பெரியகாண்டியம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் (2ம் தேதி) இரவு அண்ணன்மார் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான படுகளத்தில் உள்ள பொன்னர்-சங்கர் கோயிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் 8ம் நாள் முக்கிய நிகழ்வாக வேடபரி நிகழ்ச்சி வீரப்பூர் கன்னிமாரம்மன் வகையறா கோயில் பெரிய காண்டியம்மன் ஆலயத் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.

சாம்புவான் காளை முரசு கொட்டி முன்னே செல்ல அதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள் பொன்னழகேசன், சுதாகர்(எ)சிவசுப்பிரமணி ரெங்கராஜா மற்றும் பட்டையதாரர்கள் வர பட்டியூர் கிராமங்களின் இளைஞர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் கோயிலுக்குள் ஓடிச்சென்று குதிரை வாகனத்தில் பொன்னரை வைத்து தூக்கி வந்தனர். அதைத் தொடர்ந்து யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனும் வர, அணியாப்பூரில் உள்ள குதிரை கோயிலுக்கு பொன்னர் அம்பு போட சென்றார். இன்று காலை பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை (4ம் தேதி) மாலை மஞ்சள் நீராடுதல் விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.திரளான பக்தர்கள் பங்கேற்புசாம்புவான் காளை முரசு கொட்டி முன்னே செல்ல அதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள் பொன்னழகேசன், சுதாகர்(எ)சிவசுப்பிரமணி ரெங்கராஜா மற்றும் பட்டையதாரர்கள் வர பட்டியூர் கிராமங்களின் இளைஞர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் கோயிலுக்குள் ஓடிச்சென்று குதிரை வாகனத்தில் பொன்னரை வைத்து தூக்கி வந்தனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி