துறையூர் அருகே கோஷ்டி மோதல்: 7 பேர் கைது

துறையூர், மார்ச் 3: துறையூர் அருகே விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கொல்லப்பட்டி. இங்கு வசித்து வருபவர் செல்வம்(36). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(48) என்பவருக்குமிடையே விளையாட்டு மைதானம் அமைப்பதில் கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சித்திரைபட்டி மதுராபுரி சாலையில் நின்று கொண்டிருந்தபோது ரமேஷ் மற்றும் அவருடன் வந்த பாஸ்கரன்(35), துரைராஜ்(45), ஸ்டாலின் குமார்(35), பழனிவேல்(51), சுப்பிரமணியன்(33), குமார்(59) ஆகியோர் பன்னீர்செல்வத்திடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருந்த சுரேஷ் ஆகியோர் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் எஸ்ஐ குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்தவர்கள் 7 பேரை கைது செய்தனர். ரமேஷ் தரப்பை சேர்ந்த துரைராஜ், ஸ்டாலின்குமார், பழனிவேல், சுப்பிரமணியன், குமார் ஆகிய 5 பேரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த சுரேஷ் இருவரையும் கைது செய்தனர். இதில் காயமடைந்த ரமேஷ் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>