×

தேவாரம் பேரூராட்சியில் கொசுக்கள் ‘கொண்டாட்டம்’ மக்களுக்கோ திண்டாட்டம்

தேவாரம், மார்ச் 3: தேவாரம் பேரூராட்சியில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நகரான தேவாரம் பேரூராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து தருவதில் பேரூராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டத் தொடங்கி உள்ளது. பல தெருக்களில் சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே ஓடுகிறது.சுகாதாரம் காக்க பேரூராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காததால், கொசுக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.பகல், இரவு என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் கொசு கடிப்பதால் மக்கள் மிகுந்த அவதியடைகின்றனர். கொசு மருந்துகள் அடிப்பதாகவும், சாக்கடை அள்ளுவதாகவும் பெயரளவில் தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநருக்கு ஒப்புக்கு தகவல் அனுப்பி விட்டு, சுகாதாரத்துறை நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. கொசுக்களை ஒழித்திட தரமான மருந்துகளை வாங்கி அடிப்பதில்லை. எனவே தேவாரம் பேரூராட்சியில் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பகல் நேர கொசுக்களும் அதிகம் திரிகின்றன. இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் முறையாக சாக்கடைகளை அள்ளுவதில்லை, அள்ளிய சாக்கடைகளை குப்பைகிடங்கிற்கு முறையாக கொண்டு செல்வதில்லை. மேலும், தரமான மருந்து வாங்கி கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும்’’ என்றனர்.

Tags : Mosquitoes ,celebration ,Thevaram Baruarachchi ,
× RELATED கொரோனா பரவலிலும் கொண்டாட்டம்: ...