×

மாவட்ட கிரிக்கெட் கம்பம் அணி வெற்றி

கம்பம், மார்ச் 2: கம்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கம்பம் அணி வெற்றி பெற்றது. தேனி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேப்டன் கிரவுண்டில் கடந்த பிப்.26ம் தேதி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் கம்பம் முத்துராமலிங்கத்தேவர் கிரிக்கெட் கிளப் அணியினர், பிஎம்டிசிசி அணியினரை தோற்கடித்து முதல் பரிசான ரூ.30ஆயிரம் பணத்தையும், சாம்பியன் கோப்பையையும் பெற்றனர். பிஎம்டிசிசி அணியினர் இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பை, சின்னமனூர் அணியினர் மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, கூடலூர் டிராவிட் அணியினர் நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்பரிசு ஈஸ்வரன், இரண்டாம் பரிசு கம்பம் அதிமுக நகரச்செயலாளர் ஜெகதீஸ் மற்றும் குமார் ராஜேந்திரன், மூன்றாம் பரிசு சுரேஷ், நான்காம் பரிசு பிரகாஷ் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு வின்னர் அலீம் சிறப்பு பரிசு வழங்கினர்.

Tags : District cricket pole team ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...