×

கோடைக்கு முன்பே உச்சம் தொட்ட இளநீர் விலை

காரைக்குடி, மார்ச் 3: காரைக்குடியில் கோடை காலம் துவங்கும் முன்பே  இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயில் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போது கோடைக்கு இதமான தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, பனை நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற இயற்கையான உணவு பொருட்களையே மக்கள் பெரிதும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லை. இதனால் தென்னை  மரங்களுக்கும் சரிவர நீர் பாய்ச்சாததால் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய அளவிலான இளநீர் 15 ரூபாய்க்கும், கொஞ்சம் பெரிய அளவிலான இளநீர் 20 ரூபாய்க்கும் விற்றது. தற்போது கோடைகாலம் துவங்கும் முன்பே சிறிய இளநீர் 30 ரூபாய்க்கும், நடு ரகம் இளநீர் 40 க்கும், பொள்ளாச்சி போன்ற வெளியூர்களில் இருந்து வரும் இளநீர் 50 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இதனால் இளநீர் விரும்பிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், `` காரைக்குடிக்கு பெரும்பாலும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற வெளியூர்களில் இருந்தும் தான் அதிக அளவில் இளநீர் வருகின்றன. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் மழை இல்லை. இதனால் இளநீர் விலைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளநீர் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் திருவிழா காலம் என்பதாலும் தேவை அதிகரிப்பதால் இளநீரை போட்டி போட்டு வாங்க வேண்டியுள்ளது. இதனால் விலை சற்று அதிகமாக தான் விற்க வேண்டிய நிலை உள்ளது’’  என்றார்.


Tags : juveniles ,
× RELATED அரசு கூர்நோக்கு சிறப்பு இல்லத்தில்...