×

மனு கொடுக்க வந்தவர்கள் மறியல் சிவகங்கை கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

சிவகங்கை, மார்ச். 3: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை உள்ளே விட மறுத்த போலீசாரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை அருகே ஆலடிநத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவில் பிரச்னை தொடர்பாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரும் உள்ளே சென்று மனு அளிக்க முடியாது, சிலர் மட்டுமே செல்ல முடியும் என தெரிவித்து உள்ளே விட மறுத்தனர். இதை கண்டித்து கிராமமக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வாயிலில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தொடர்ந்து அவர்களில் இருபது நபர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர். பின்னர் கிராமமக்கள் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து மனு அளித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sivaganga Collector Office ,
× RELATED ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம்...