×

ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காளையார்கோவில், மார்ச் 3:  காளையார்கோவில் ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். காளையார்கோவில் பஸ் நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி தலைமையில் காளையார்கோவில் முன்னாள் ஒன்றிய தலைவர் ஆரோக்கியசாமி, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி முன்னாள் சேர்மன் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்து, முன்னால் மாவட்ட பிரதிநிதி சமயத்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணக்குமார் மற்றும்  கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இதேபோல் தெற்கு ஒன்றிய செயலாளர் மார்த்தாண்டன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு  மறவமங்கலத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Tags : Stalin ,Birthday Celebration ,
× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...