×

சிவகங்கையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

சிவகங்கை, மார்ச். 3:  சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் இந்தியன் ஆர்மி ஜிம் சார்பில் சிவகங்கை மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. வழக்கறிஞர் ராம்பிரபாகர் தலைமை வகித்தார். இந்தியன் ஆர்மி ஜிம் முத்துராஜா வரவேற்றார். மாஸ்கோ ஜிம் பரமசிவம், நேரு யுவகேந்திரா முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் மரியன் (மாஸ்கோ ஜிம் சிவகங்கை), 60 கிலோ எடைப்பிரிவில் சங்கரவேல் (நியூ கிளாசிக் ஹைடெக் ஜிம் காரைக்குடி), 65 கிலோ எடைப்பிரிவில் ஜெயசீலன் (நியூ கிளாசிக் ஹைடெக் ஜிம் காரைக்குடி), 70 கிலோ எடைப்பிரிவில் ஜின்னா (நியூ கிளாசிக் ஹைடெக் ஜிம் காரைக்குடி) 75 கிலோ எடைப்பிரிவில் ஸ்டீபன்ராசு (ரி6 பிட்னஸ் சென்டர் காரைக்குடி). 75 கிலோ எடைப்பிரிவில் அரவிந்த்(நியூ கிளாசிக் ஹைடெக் ஜிம் காரைக்குடி) முதலிடம் பிடித்தனர். ஓவர் ஆல் சாம்பியனாக ஜின்னா, பெஸ்ட் போஸர் ஆக மரியன், மோஸ்ட் மஸ்குலர் ஆக ஸ்டீபன்ராசு ஆகியோர் பட்டம் வென்றனர். தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க மாநில பொருளாளர் தேசிய நடுவர் ஐயன்போஸ், மாநில துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மிஸ்டர் இந்தியா சுதன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். மாஸ்கோ ஜிமி செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : District level competition ,Sivaganga ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு...