×

அரசுப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

இளையான்குடி, மார்ச் 3: இளையான்குடி அருகே திருக்கள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு, கிராம மக்கள் சார்பாக கல்விசீர் வழங்கும் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் சேவியர் தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் எப்சிபா பியூலா பாக்கியவதி வரவேற்றார்.இளையான்குடி ஒன்றியத்தில் முதன் முதலாக திருகள்ளி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கணினி, டேபிள், சேர், நாற்காலி, பீரோ, நோட்டு புத்தகங்கள் என அனைத்தையும், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திரளாக மேளதாளதாளம் முழங்க தங்களது பிள்ளைகள் படிக்கும் திருகள்ளி அரசு பள்ளிக்கு, ஒவ்வொரு பொருளையும் கைகளிலும், தலைச்சுமையாக எடுத்துவந்து சேர்த்தனர். பள்ளியின் சார்பாக ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.ஊர் மக்கள் அனைவரும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு கல்விசீர் வரிசை கொன்டு வந்த இந்த நிகழ்வு அப்பகுதியில் திருவிழாக் கோலம் போல் காட்சியளித்தது. விழாவில் கல்வியாளர் ஸ்தனிஸ்கிளாஸ், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சூசைமேரி, துனைத் தலைவர் லலிதா உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : government school ,
× RELATED 70வது நாளாக தமிழக பள்ளிகளுக்கு பூட்டு...