×

ராமநாதபுரம் கல்லூரி விழாவில் 567 மாணவர்களுக்கு பட்டம்

ராமநாதபுரம், மார்ச் 3:  ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா தொடங்கி வைத்தார். தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் அமானுல்லா ஹமீது வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் கலந்துகொண்டு 529 மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை பட்டங்கள், 38 மாணவ,மாணவிகளுக்கு முதுகலைப் பட்டம் வழங்கினார். அவர் பேசும்போது, மாணவ,மாணவிகள் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணி, வீட்டுக்கு பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை, வேலை வாய்ப்பு பெறுவது போன்றவற்றைப் பற்றி பேசினார். விழாவில் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் ராசாத்தி அப்துல்லா, சின்னத்துரை அப்துல்லா ஆகியோரும் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு ஏற்பாடுகளை அனைத்துத் துறை ஆசிரியர்களும் மாணவ,மாணவிகளும் கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மேற்பார்வையாளர் சாயுல்லா செய்திருந்தனர். ஆங்கிலத் துறை பேராசிரியர் சித்ராதேவி யோகலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சத்யவதி நன்றி கூறினார்.

Tags : Ramanathapuram College Festival ,
× RELATED சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு...