×

அரசு பள்ளி ஆண்டு விழா

கமுதி, மார்ச் 3:  கமுதி அருகே மண்டல மாணிக்கம் ஊராட்சி, பச்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர்தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கிராம தலைவர் இருளப்பன், கிராம செயலர் ராக்கப்பன் முன்னிலை வகித்தனர்.   விழாவில் மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலாஜி, பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வராணி, வலைய பூக்குளம் பள்ளி தலைமையாசிரியை செல்வின் சாக்ரோஸ், புதுக்கோட்டை பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Government School Anniversary ,
× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா