×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காத்திருப்பு, தர்ணா போராட்டம்

தொண்டி, மார்ச் 3:  மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொண்டியில் 7 நாட்களாக பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் தொண்டியில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு இஸ்லாமிய மக்கள் சார்பில் பாவோடி மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் துவங்கப்பட்டது. நேற்று 7வது நாட்களாக போராட்டம் தொடாந்து நடைபெற்றது. சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நேற்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா கலந்துகொண்டு  பேசினார். மாநில செயலாளர் சாதிக் பாட்சா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுபோல் தவ்கித் ஜமாத் சார்பில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஆற்றங்கரை நகர் பேருந்து நிலையம் அருகில் ஹைதர் அலி தலைமையிலும், தேவிபட்டினத்தில் ஜாபர் தலைமையிலும், திருப்பாலைக்குடியில் சீனிமுகம்மது தலைமையிலும், ஆர்.எஸ்.மங்கலத்தில் முஹம்மது கனி தலைமையிலும், எஸ்.பி.பட்டினத்தில் சாகுலு ஹமீது தலைமையிலும், மங்கலக்குடுயில் அஷ்ரப் அலி தலைமையிலும், பனைக்குளத்தில் சாகுல் ஹமீது தலைமையிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Tags :
× RELATED குடியுரிமை சட்டத்திருத்தத்தை...