×

மகாத்மா காந்தி சிலைக்கு புத்த பிட்சுகள் மரியாதை

மதுரை, மார்ச் 3: ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மதுரை வந்த புத்த பிட்சுகள் மதுரை காந்திமியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செலுத்தியும் உலக அமைதிக்கான பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மதுரை காந்தி மியூசியத்திற்கு நிப்பொன்சன் மியொ ஹொஜி என்ற அமைப்பின் சார்பில், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து புத்த பிட்சுகள், பிக்குனிகள் மதுரை வந்தனர். புத்த பிட்சு இஸ்தானி, புத்த பிக்குனிகள் லீலாவதி, திமுராய் உள்ளிட்டோர் தலைமையில் வந்த 30க்கும் மேற்பட்டவர்களுக்கு காந்தி மியூசியத்தில் யானையை வரவழைத்து, மாலைகள் போட்டு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.  மியூசிய செயலாளர் காமு நடராஜன் தலைமை வகித்தார். காந்தி அருங்காட்சிய இயக்குநர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் , சர்வோதய மண்டல செயலாளர் ராஜேந்திரன், ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்த இவர்கள், இங்குள்ள அஸ்தி பீடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உலக அமைதி வேண்டி நடந்த சர்வ சமய வழிபாட்டிலும் பங்கேற்றனர். சங்கரன்கோவி–்ல் வீரிருப்பு பகுதியில் புத்தர் ஸ்தூபி நிறுவி, வரும் 4ம் தேதி அங்கு புத்தர் அஸ்தியும் வைக்கப்படுகிறது. இவ்விழாவிற்காக வந்துள்ள இவர்கள், மதுரையில் பிரார்த்தனையை முடித்து விட்டு, சங்கரன்கோவில் கிளம்பிச் சென்றனர்.

Tags : Mahatma Gandhi ,
× RELATED தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி...