×

டூவீலர் மீது வேன் மோதி 2 பேர் பலி: ஒருவர் படுகாயம் குஜிலியம்பாறை அருகே சோகம்

குஜிலியம்பாறை, மார்ச் 3: குஜிலியம்பாறை அருகே டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில் 2 பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். குஜிலியம்பாறை அருகே கோட்டநத்தம் திருக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (60), மணிவேல் (44). விவசாயிகளான இருவருக்கும் அதே ஊரில் சொந்தமாக தோட்டங்கள் உள்ளன. கோட்டாநத்தம் குமரன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (45). பாளையம் டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிகிறார். இவருக்கும் குமரன்பட்டியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த 3 பேரும் தங்களது தோட்டங்களில் விளையும் விளைபொருட்களை மினிவேன்கள் மூலம் கரூரில் உள்ள உழவர்சந்தைக்கு விற்பனை அனுப்பி வந்தனர்.இந்நிலையில் 3 பேரும் நேற்று அதிகாலை தோட்டத்தில் விளைந்த தக்காளியை மினிவேல் மூலம் கரூர் உழவர்சந்தையில் விற்பனை செய்ய கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து காலை 6.30 மணியளவில் பழனிச்சாமி, மணிவேல், முருகேசன் ஆகியோர் ஒரே டூவீலரில் திருமக்கம்பட்டி நோக்கி சென்றார். டூவீலரை பழனிச்சாமி ஓட்டி வந்தார். டி.கூடலூர் பூபாலம்மன் கோயில் சாலையில் வந்த போது எதிரே கரூர் நோக்கி சென்ற தனியார் மில் ஜீப், டூவீலருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பழனிச்சாமி, மணிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் ஜீப் டிரைவர் எரியோட்டை சேர்ந்த கனகராஜ் (52) மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : van crashes ,
× RELATED டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி...