மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு வரும் வரை வாடகை உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்: கோயில் மனை குடியிருப்போர் சங்கம் துணை முதல்வரை சந்தித்து மனு

சென்னை: மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு வரும் வரை வாடகை உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோயில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் துணை முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு கோயில் மனை  குடியிருப்போர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பாடி தேவர் நகர் செயலாளர் அன்புரோஸ், பாடி நாராயணமூர்த்தி, நகர் செயலாளர் செல்வகுமார், அரும்பாக்கம் ஜெபராஜ் உள்ளிட்டோர் வணிகர் சங்க பேரவை தலைவர்  த.வெள்ளையன் தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கோயில்  மனைகளில் பல ஆண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு தாங்கள் ெவளியிட்டுள்ள அரசாணை மூலமாக தடைகளை தகர்த்தெறிந்து பட்டா வழங்கி தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான  குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். ேகாயில் மனையில் குடியிருப்போர் கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் மனைகளில் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

கோயில் பதிவேடுகளில் தங்கள் பெயரை பதிவு செய்ய கட்டியிருக்கும் வீட்ைட கோயிலுக்கு தானமாக எழுதி கேட்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு நடைமுறையில் உள்ள அரசானைகளின்படி வாடகை  நிர்ணயிக்கப்பட்டு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகையை உயர்த்தி முன்தேதியிட்டு அறிவிப்பு கொடுத்திருப்பதை, வாடகை உயர்வுக்கு மேல் முறையீட்டு மனுக்களில் தீர்வு வரும் வரை வாடகை உயர்வை நிறுத்தி வைக்க  வேண்டும். குடியிருப்போருக்கு உள்ள பிரச்னைகளை விவாதித்து தீர்வு காண அரசு, அறநிலையத்துறை, குடியிருப்போர் அடங்கிய முத்தரப்பு கமிட்டி அமைத்து விவாதித்து தீர்வு காண வேண்டும். தற்போது வெளியிடப்பட்ட  அரசாணையை  அமல்படுத்தும் வரை மேற்கூரையை கோயிலுக்கு தானமாக கேட்பதையும், புதிய வாடகையை அமல்படுத்தி நடவடிக்கை எடுப்பதையும் தற்காலிமாக நிறுத்தி வைத்து தமிழகத்தில் 20 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காத்திட  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>