×

ஹெல்மெட் அணியாததை கேட்டதால் ஆத்திரம்: டிராபிக் எஸ்ஐயை தாக்கிய வாலிபர் கைது

சென்னை: சென்னை சேத்துப்பட்டு போக்குவரத்து காவல்நிலையத்தில் சாலமன் (56) என்பவர் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு ஹாரிங்டன் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வாலிபர் ஒருவர் நண்பருடன் வந்தார். இதை பார்த்த உதவி ஆய்வாளர் சாலமன் பைக்கை வழிமறித்து ஹெல்மெட் ஏன் அணியவில்லை என்று கேட்டுள்ளார். அப்போது பைக்கில்  வந்த வாலிபருக்கும் உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் உதவி ஆய்வாளர் சட்டையை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. புற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.  அப்போது தூத்துக்குடியை சேர்ந்த சிங்கராஜ் (30) என தெரியவந்தது. பின்னர் அவர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Tags :
× RELATED கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு மூலம்...