×

வாழப்பாடி பகுதியில் திமுக தலைவர் பிறந்தநாள் விழா

வாழப்பாடி, மார்ச் 3: வாழப்பாடி பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வாழப்பாடி நகர திமுக சார்பில், பஸ் ஸ்டாண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் செல்வம் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமார், சுப்பிரமணி, இளைஞரணி அமைப்பாளர் செல்வம், ஆட்டோ சுரேஷ், மகேஷ், கோபிநாத், மார்ட்டின், வெங்கடேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர், ஏத்தாப்பூர் பேரூர் தி.மு.க. சார்பில் அனைத்து வார்டுகளிலும் திமுக தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்து இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நடராசன், அன்பு, சடையன், தியாராஜன், கந்தன், பரமசிவம், வெங்கடேஷ், சாந்தி கருணாநிதி, காட்டுராஜா, செந்தில், முருகன், லட்சுமணன், பழனிசாமி, கண்ணன், குமார், கணேசன், தமிழ், மாது, கமலக்கண்ணன், ரவி, பாலு, சிவக்குமார், ராஜேந்திரன், முத்துக்குமார், மாது, குமரன், பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,birthday party ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி