×

திமுக உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்களிடம் விண்ணப்ப படிவம் வழங்கல்

கெங்கவல்லி, மார்ச் 3: கெங்கவல்லி ஒன்றியத்தில் 15வது ஊர்க்கிளை மற்றும் உட்கிளை தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமை வகித்து விண்ணப்ப படிவஙக்ளை பொறுப்பாளர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கெங்கவல்லி ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் காமராஜ், கெங்கவல்லி கழக செயலாளர் ஷேக் மொய்தீன், முன்னாள் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ஊராட்சி செயலாளர் பெருமாள், செல்வம் மற்றும் முன்னாள் நிர்வாகி கோபி, ஒதியத்தூர் ராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : trustees ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி