×

2 இடங்களில் ஓட்டுரிமை ஒன்றிய கவுன்சிலரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வழக்கு

சேலம், மார்ச் 3: உள்ளாட்சி மன்ற தேர்தலில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் வார்டு எண் 9 தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பழனிசாமி என்பவர் வெற்றி பெற்றார். இவர் தன்னுடைய வேட்பு மனுவில் சொத்துமதிப்பை குறைத்து காட்டியும், தெத்திகிரிப்பட்டி கிராமம் கரும்புசாலியூரில் ஒரு ஓட்டுரிமையும், அவருக்கு ஏற்கனவே தர்மபுரி நகரில் ஒரு ஒட்டுரிமை வைத்து இருக்கிறார். பழனிசாமி உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி சதீஸ்குமார் என்பவர் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

Tags : voter union councilor ,victory ,places ,
× RELATED வேதா இல்லம் மட்டுமல்லாது, அனைத்து...