×

கிருஷ்ணகிரியில் காஸ் சிலிண்டர்களை எடை போட்டு வழங்க வேண்டும்

கிருஷ்ணகிரி, மார்ச் 3: கிருஷ்ணகிரியில் காஸ் சிலிண்டர்களை எடை போட்டு விநியோகம் செய்ய வேண்டும் நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரியில் உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில், எரிவாயு முகவர்களுடன் தன்னார்வ நுகர்வோர் எரிவாயு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கனகராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், சமையல் காஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் போது எடை போட்டு வழங்க வேண்டும். ஆனால் சிலிண்டர்களை எடை போடாமல் டெலிவரி செய்கின்றனர். அத்துடன் ரசீதும் கொடுக்காமல் மோசடி நடைபெறுகிறது. இதை தடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், நுகர்வோர் சங்க வேப்பனஹள்ளி சங்க தலைவர் கோபிநாத், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சிங்காரவேல், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மணிகண்டன், நுகர்வோர் சங்க தலைவி ஜூலியட் தங்கம், நுகர்வோர் சங்க செயலாளர் காவேரிப்பட்டணம் சந்திரகலா மற்றும் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.

Tags : Krishnagiri ,
× RELATED பளு தூக்கும் வீராங்கனை பயோபிக்