×

காவேரிப்பட்டணத்தில் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

காவேரிப்பட்டணம், மார்ச் 3: காவேரிப்பட்டணத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமையில் பாலக்கோடு கூட்ரோட்டிலிருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தில் 67 கிலோ கேக் வெட்டி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர், சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஜின்னா ரோடு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் நோட்டு, புத்தகம், பென்சில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, காவேரிப்பட்டணம் மில் மேட்டில் உள்ள அன்னை அன்பு ஆதரவற்றோர் இல்லத்தில், குழந்தைகளுக்கு அறுசுவை உணவை செங்குட்டுவன் எம்எல்ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேரூர் செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை நாகராஜன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொருளாளர் ராஜேந்திரன், ராஜன், வக்கீல் விஸ்வபாரதி, இளங்கோவன், சாஜித், மணிகண்டன், பையூர் இளங்கோ, புட்பால்சக்தி, சங்கர், பசுபதி, விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Stalin ,Birthday Celebration ,
× RELATED ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத்...