×

ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

ராசிபுரம், மார்ச் 3: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில், பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டு குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாவட்ட பொருளாளர் செல்வம். நகர செயலாளர் சங்கர், ராசிபுரம் ஒன்றியக்குழு  தலைவர் ஜெகநாதன் மற்றும் நிர்வாகிகள் பாலச்சந்திரன், ரங்கசாமி வனிதா செங்கோட்டையன், அருள், கார்த்திக், ராஜேந்திரன், பாலு,  மோகன்தாஸ், வழக்கறிஞர் கீதாலட்சுமி, அமிர்தலிங்கம், ரவிச்சந்திரன், ஆனந்தன்,   நாகேஸ்வரன், ரங்கசாமி, ராம்குமார், சிவக்குமார், அருளரசன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்: காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஸ்கர்,  ஜானகி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தங்க மோதிரத்தை அனுவித்தார். இந்த நிகழ்ச்சியின்  முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார்,  பாலசுப்ரமணியம், பேரூர் செயலாளர் தனபாலன், மாவட்ட மகளிள் அணி அமைப்பாளர்  ராணி, இளைஞரணி துணை அமைப்பாளர் கதிர்வேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : baby ,birthday ,Stalin ,
× RELATED இரண்டு வாய்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை...