×

வள்ளலார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தர்மபுரி, மார்ச் 3: தர்மபுரி அருகே குறிஞ்சிநகர் வள்ளலார் அறிவாலய நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை மாதேஸ்வரி தலைமை வகித்தார். குழந்தைகள் நல குழும தலைவர் சரவணன் கண்காட்சியை தொடக்கிவைத்து பேசினார். இக்கண்காட்சியில் மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படைப்புகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். கண்காட்சியில் சிறப்பிடம் வகித்த மாணவர்களுக்கு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. உதவி ஆசிரியை பரிமளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Science Exhibition ,Vallalar School ,
× RELATED வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி