×

பிடமனேரி ஏரிக்கரையில் குப்பைக்கு தீயிட்டு எரிப்பு

தர்மபுரி, மார்ச் 3: பிடமனேரி ஏரிக்கரையில், குப்பைகளை தீயிட்டு எரிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலக்கியம்பட்டி ஊராட்சியில் உள்ள பிடமனேரி, நகராட்சியை ஒட்டி உள்ளது. பிடமனேரியில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், பிடமனேரியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, ஏரிக்கரையில் கொட்டி வைக்கப்படுகிறது.

இந்த குப்பைகள் ஏரியில் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, ஏரிக்கரையை ஒட்டியபடி உள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், தண்ணீர் கருப்பாக வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பொது குழாய் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரியில் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாக கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஏரிக்கரையில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bidmaneri Lake ,
× RELATED கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண்...