×

அரூர் பகுதியில் அதிக கரும்பு பாரம் ஏற்றி செல்லும் டிராக்டர்களால் விபத்து அபாயம்

அரூர், மார்ச் 3: அரூர் பகுதியில் அதிக கரும்பு பாரத்தை டிராக்டர்களில் ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகிய இடங்களில், நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை தொடங்கியுள்ளது. அரூர் சர்க்கரை ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கரும்பு லாரி, டிராக்டர் மூலம் அரவைக்கு கொண்டு வரப்படுகிறது. டிராக்டரில் அளவிற்கு அதிகமாக எப்போது சாய்ந்து விடுமோ என்ற நிலையில், கரும்பு ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு வரும் டிராக்டர்கள், மின் கம்பியை உரசி கொண்டு செல்லும் வழியில், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும், டிராக்டர்கள் கவிந்தும் வருகிறது.

அரூர்- சேலம் பைபாஸ் சாலையில் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் டிராக்டரை கடந்து செல்லும் போது, அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக பாரத்தை கொண்டு செல்லும் திறன், டிராக்டர்களுக்கு இல்லாததால் அடிக்கடி டிராக்டர்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் மரக்கிளைகளில் மாட்டி கரும்புகள் கீழே விழுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லாரிகளில் கரும்புகளை கொண்டு செல்வது பாதுகாப்பானது. ஆனால் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில், டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆலை நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் கரும்பை அரவைக்கு கொண்டு வருவதில், சில கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cane loading tractors ,area ,Aroor ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை