×

தர்மபுரியில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

தர்மபுரி, மார்ச் 3: தர்மபுரியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு, குடிநீர் வடிகால் வாரியத்துறை மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 11 மினரல் வாட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மினரல் வாட்டர் உற்பத்தி மற்றும் சப்ளை செய்பவர்கள், கடந்த 3 நாட்களாக ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இதனால் தர்மபுரி நகர் மற்றும் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் தண்ணீர் கிடைக்காமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தர்மபுரி பி.அக்ரஹாரம் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘2014ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் விதிமுறை தளர்த்த வேண்டும்.

புதியதாக வைக்கும் மினரல் வாட்டர் உற்பத்தி நிறுவனத்திற்கு, 2014ம் ஆண்டு சட்ட விதிமுறை பொருந்தும் என்று கூறினால் நன்றாக இருக்கும். பழைய நிறுவனங்களுக்கு விதிமுறையில் சில தளர்த்தல் முறையை கையாள வேண்டும் என்று கேட்டுள்ளோம்,’ என்றனர்.

Tags : Sealing ,Drinking Water Plant ,Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...