×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உரிமம் புதுப்பிக்காத டீக்கடைகள் மூடல் குறைதீர் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

கரூர், மார்ச் 3: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த டீக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர் பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாகவும், உரிமத்தை புதுக்காததும் தெரியவந்ததால் கடைகள் மூடப்பட்டுள்ளது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட டீக்கடைகள் செயல்படுகின்றன. வாரந்தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் உட்பட பல்வேறு வேலை நிமித்தமாக வரும் பொதுமக்களும், கலெக்டர் அலுவலக வளாக அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இதுபோன்ற கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் இந்த கடைகளில், உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் முறையான அனுமதி பெறாமலும், உணவு பாதுகாப்புத்துறையில் பெற்றிருந்த லைசென்ஸ் உரிமம் புதுப்பிக்கப்படாமலும் டீக்கடைகள் செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கலெக்டரிடம், ஆய்வு மேற்கொண்ட தகவல்களை தெரிவித்தனர். இதனடிப்படையில், உரிமம் புதுப்பிக்கப்பட்டு, முறையான அனுமதி பெற்ற பின்னர் கடைகளை நடத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியதால் கடைகள் மூடப்பட்டுள்ளன.
நேற்று கடைகள் செயல்படாத காரணத்தினால் குறைதீர் நாள் முகாமிற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags : office ,Collector ,Closing Stations ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...