×

புதிய மின் இணைப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் செயற்பொறியாளர் தகவல்

கரூர், மார்ச் 3: மார்ச் 1ம்தேதிக்கு பிறகு புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மின்சார வாரிய விதிமுறைகளின்படி மார்ச் 1ம்தேதி முதல் அனைத்து விதமான புதிய மின் இணைப்பு விண்ணப்பங்களும் (அக்ரிகல்சர், ஹட் தவிர) இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே புதிய மின் இணைப்பு (குடிசை மற்றும் விவசாயம் தவிர) பெற விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் மூலம் www.tangedco.in என்ற முகவரியில் மட்டுமே விண்ணப்பங்கள் மற்றும் சான்றொப்பமிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து மின் இணைப்பு பெற்று கொள்ள முடியும். மேலும், மார்ச் 1ம்தேதிக்கு பிறகு பிரிவு அலுவலங்களில் புதிய மின் இணைப்பு விண்ணப்பங்களை நேரடியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, இணையதளம் மூலமாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா