×

குளித்தலை கல்வி மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களுக்கு 1,513 இலவச சைக்கிள் வழங்கல்

குளித்தலை, மார்ச் 3: குளித்தலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பதினொராம் வகுப்பு படிக்கும் 1,513 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. குளித்தலை கல்வி மாவட்டத்திலுள்ள குளித்தலை அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திம்மாச்சிபுரம், வேங்காம்பட்டி, பஞ்சப்பட்டி, தோகைமலை, ஆர்டி மலை, ஆலத்தூர், இனுங்கூர், நெய்தலூர் ஆகிய பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் 1,513 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா குளித்தலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. குளித்தலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் கபீர் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கண்ணதாசன், கூட்டுறவு சங்க தலைவர் சோமு ரவி, தோகைமலை ஒன்றியக்குழு தலைவர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் 1,513 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை குளித்தலை ஒன்றிய குழுத்தலைவர் விஜய் விநாயகம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags : school children ,
× RELATED கொரோனாவை விரட்ட விதவிதமான...