×

தோகைமலை ஒன்றியத்தில் நடைபெறவுள்ள திமுக உள்கட்சி தேர்தல் பணியில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வம்

தோகைமலை, மார்ச் 3: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய திமுகவின் உள்கட்சி தேர்தல் நடத்துவதால் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. தோகைமலை ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளை கொண்டு திமுக கட்சி செயல்பட்டு வந்தது. தற்போது தலைமை கழகத்தின் உத்தரவின்பேரில் மாவட்ட கழக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் ஆலோசனைப்படி தோகைமலை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களாக 20 ஊராட்சிகளை இரண்டாக பிரித்து உள்ளனர். இதில் தோகைமலை மேற்கு ஒன்றியத்தில் தோகைமலை, நாகனூர், கழுகூர், சின்னையம்பாளையம், கூடலூர், கள்ளை, கல்லடை, பில்லூர், பாதிரிபட்டி, பொருந்தலூர் ஆகிய 10 ஊராட்சிகளும்,
தோகைமலை கிழக்கு ஒன்றியமாக முதலைப்பட்டி, சேப்ளாப்பட்டி, நெய்தலூர். ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், தளிஞ்சி, புத்தூர், வடசேரி, ஆர்டிமலை, புழுதேரி ஆகிய 10 ஊராட்களும் தேர்வு செய்து உள்ளனர்.

அதன்படி முதல் கட்டமாக திமுகவின் புதிய கிளைக்கழகம் அமைப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தோகைமலை கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் ஆணையராக பொதுக்குழு உறுப்பினர் ராஜ்கண்ணு, கட்சி நிர்வாகிகள் குணசேகர், கலைமணி ஆகியோர் மேற்பார்வையில் ஒவ்வொரு கிராமம் கிராமமாக நேரடியாக சென்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்த்தல், மகளிர் அணி சேர்த்தல் என்று 186 கிளைகள் அமைக்கும் பணிகளில் படிவங்களை ஆய்வு செய்தும், தொண்டர்களிடம் கருத்து கேட்டும் சிறப்பாக செய்து வருகின்றனர். இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு உள்கட்சி தேர்தலில் பாரபட்சம் இல்லாமல் தேர்தல் நடத்துவதால் திமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதேபோல் தோகைமலை கிழக்கு ஒன்றியத்தின் திமுக உள்கட்சி தேர்தல் பணிகளில் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், சந்திரன், காந்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பிச்சை, புகழேந்தி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோவன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னையன், லதாவேலுச்சாமி, ஊராட்சி செயலாளர்கள் தணிக்காசலம், சேகர், பெரியசாமி, சிவராஜ், வேலாயுதம், காமராஜ் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், லோகநாதன், பாண்டியன், ஆலத்தூர் பாண்டியன் உள்பட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : executives ,Volunteers ,election campaign ,DMK ,Dokaimalai Union ,
× RELATED திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகத்துறை நிர்வாகிகள் கூட்டம்