×

தொழிலாளர் சட்டங்களை சீர்குலைத்ததை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 3: தொழிலாளர் சட்டங்களை சீர்குலைத்ததை கண்டித்தும் கரூர் பஸ்நிலையம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்பிஎப் நிர்வாகி அண்ணாவேலு தலைமை வகித்தார். இதில், பிற தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளான அப்பாசாமி, அம்பலவாணன், ஜீவானந்தம், வடிவேலன், பால்ராஜ், பழனிசாமி, முருகேசன், குப்புசாமி, ராஜன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐசிசிடியூ, எச்எம்எஸ், எம்எல்எப், எல்எல்எப் ஆகிய பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் 2020ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு எதிராகவும், தொழிலாளர் சட்டங்களை சீர்குலைத்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : unions ,Karur ,
× RELATED படைத்துறை தொழிற்சாலைகளை தனியார்...