×

அனைத்திந்திய மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  மார்ச் 3:  புதுவையில் இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்ற அமைச்சரவை  முடிவெடுத்த நிலையில் கவர்னர் கிரண்பேடி அரிசிக்கு பதிலாக பணம் வழங்க  நடவடிக்கை எடுத்தார். இதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கவர்னர் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு  வந்தது.

இதனால் புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல்  வாக்குறுதியில் ஒன்றான இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. இதனிடையே பணத்திற்கு பதிலாக ரேஷனில் அரிசி வழங்க வேண்டுமென  காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.  இதேபோல் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இக்கோரிக்கையை  வலியுறுத்தி சுதேசி பஞ்சாலை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் சுதா  சுந்தரராமன், தமிழ் மாநில தலைவர் வாலண்டினா, மாநில செயலர் சத்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 இந்த போராட்டத்தில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு இலவச அரிசி வழங்கக்கோரி கோஷமிட்டனர். அப்போது காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சுடுதண்ணீர் மட்டுமே  போட்டும் நூதன முறையில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Tags : protest ,India Mather Association ,
× RELATED அனுஷ்கா எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியாகும் நிசப்தம்