×

சீர்காழி அருகே காரைமேடு தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் சார்பில் மாதிரி கிராமமாக தேர்வு

சீர்காழி, மார்ச் 3: சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் சார்பில் மாதிரி கிராமம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு நீர்வள ஆதார துறை ஆலோசகர் ராஜகோபால் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் தங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பொருளியல் ஆலோசகர் கனகா, கால்நடைத்துறை மருத்துவர் மூர்த்தி, மீன்வளதுறை ஆய்வாளர் பிலிப் கிளமெண்ட், வேளாண்மை துறை உதவி இயக்குனர்(பொறுப்பு) சின்னண்ணன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் தர், உதவி தோட்டக்கலை அலுவலர் குமரேசன், வேளாண்மை விற்பனை துறை உதவி அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி வரவேற்றார்.

தமிழ்நாடு நீர்வள ஆதார துறை ஆலோசகர் ராஜகோபால் பொதுமக்களிடம் கலந்துரையாடல் செய்த பின்பு நிருபரிடம் கூறுகையில் நாகை மாவட்டத்தில் நீர்வள ஆதார துறை சார்பில் 20 கிராமங்கள் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக காரைமேடு கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கால்நடை துறை மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு துறையும் செய்யும் திட்டங்கள் ஆய்வு செய்யப்படும். டெல்டா மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாலி ஏரியை ரூ.3.45 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். இதில் காவிரி வடிநில கோட்ட உதவி பொறியாளர் சண்முகம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கேசவராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுடன் ஆலோசகர் ஆலோசனை
 வெள்ளரி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவாகிறது.
 நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு

1 டன் வெள்ளரி கிடைக்கும்.

Tags : model village ,Sirkazhi ,
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்