×

அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

திண்டிவனம், மார்ச் 3: திண்டிவனம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குறைந்த அளவு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் நுழைவு வாயில் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரில் மாணவர்கள் இறங்கி செல்ல கூடிய அவலநிலை உள்ளது. மேலும் பள்ளியின் அருகே சாலையோரங்களில் மாட்டு சாணம், வைக்கோல் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், ஏராளமான கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இந்த கொசுக்கள் மாணவ, மாணவிகளை கடிப்பதால் மலேரியா, டைபாய்டு மற்றும் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு பள்ளி வளாகத்தை சரிசெய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை